காஞ்சி வடக்கு மாவட்டம், தாம்பரம் பெருநகரம் தமுமுக மற்றும் தமுமுக சார்பாக 27.11.2015 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாம்பரம் எஸ்ஜிஎஸ் மஹாலில் நகர செயல்வீரர்கள் கூட்டம் தமுமுக நகர செயலாளர் ஆ. ஆசாத்காமில் தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் கௌஸ்பாஷா கிராத் ஓதி துவக்கி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது இக்பால் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சலீம்கான், மாநில அமைப்புச் செயலாளர் சகோ. யாக்கூப் அவர்கள், பேரா. ஹாஜா கனி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். டிசம்பர் 6 அன்று பல்லாவரத்தில் நடைபெற உள்ள பாப்ரி மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து நடைபெறும் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் பற்றி பேச்சாளர்கள் விளக்கி பேசினார்கள். இந்நிகழ்வில் நகர பொருளார் ஷேக் மொய்தீன், மாவட்ட செயலாளர் அப்துர் ரவூப், இப்றாஹிம், அக்பர், தமீம் அன்ஸாரி உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். முடிவில் நகர பொருளாளர் ஷேக் மொஹிதீன் நன்றியுரை ஆற்றினார்.
Saturday, 28 November 2015
தாம்பரத்தில் தமுமுக மற்றும் மமக செயல்வீரர்கள் கூட்டம்
காஞ்சி வடக்கு மாவட்டம், தாம்பரம் பெருநகரம் தமுமுக மற்றும் தமுமுக சார்பாக 27.11.2015 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாம்பரம் எஸ்ஜிஎஸ் மஹாலில் நகர செயல்வீரர்கள் கூட்டம் தமுமுக நகர செயலாளர் ஆ. ஆசாத்காமில் தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் கௌஸ்பாஷா கிராத் ஓதி துவக்கி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது இக்பால் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சலீம்கான், மாநில அமைப்புச் செயலாளர் சகோ. யாக்கூப் அவர்கள், பேரா. ஹாஜா கனி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். டிசம்பர் 6 அன்று பல்லாவரத்தில் நடைபெற உள்ள பாப்ரி மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து நடைபெறும் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் பற்றி பேச்சாளர்கள் விளக்கி பேசினார்கள். இந்நிகழ்வில் நகர பொருளார் ஷேக் மொய்தீன், மாவட்ட செயலாளர் அப்துர் ரவூப், இப்றாஹிம், அக்பர், தமீம் அன்ஸாரி உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். முடிவில் நகர பொருளாளர் ஷேக் மொஹிதீன் நன்றியுரை ஆற்றினார்.
தாம்பரத்தில்பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

நிகழ்ச்சியை தாம்பரம் நகர தமுமுக மற்றும் அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மைய நிர்வாகிகள் ஆசாத் காமில், கவுஸ்பாஷா, அஹமது ராஜா, முபாரக் அலி, தமீம் அன்ஸாரி, அமீனுதீன், ஆசிக் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக பங்கு கொண்டனர்.
Sunday, 22 November 2015
தாம்பரத்தில் தமுமுகவின் மனிதநேய பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்
தாம்பரம் நகரம் சார்பாக பேரிடர் மீட்பு பணிகள்
தாம்பரத்தில் 14.11.15 அன்று பெய்த கன மழையின் போதே நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கத் தொடங்கியது. முதல் கட்டமாக 15.11.2015 அன்று தமுமுக நகர அலுவலகத்தில் நகர செயலாளர் ஆசாத்காமில் தலைமையில் நடைபெற்ற மாணவரணி மற்றும் தமுமுக செயல்வீரர்களின் ஆலோசனை கூட்டத்தில் மழையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் செய்வது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவரணியினர் மற்றும் நகர நிர்வாகிகள் அனைத்து வார்டுகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். பின் பாதிக்கப்பட்ட இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து முகநூலில் "தாம்பரம் நகராட்சியின் கவனத்திற்கு" என்று பதிவிட்டு நகராட்சியை பணியாற்ற முடுக்கினர்.
இரண்டாம் கட்டமாக மாநில அமைப்புச் செயலாளர்சகோ. யாக்கூப் அவர்கள் தென்காசி பொதுக்கூட்டம் முடித்து 16.11.2015 தாம்பரம் வந்தவுடன் மீட்பு பணிகளை செய்ய தமுமுக பேரிடர் மீட்பு குழுவை அமைத்து பணிகளை விரைவு படுத்தினார். அவரது ஆலோசனையின் படி கோவளத்திலிருந்து சகோ. கோவளம் யாக்கூப் அவர்களிடமிருந்து 30 பேர் அமரக்கூடிய வகையிலான பெரிய படகு ஒன்றையும் அதை இயக்க கோவளம் யாக்கூப், சௌகத் அலி, சாகுல்ஹமீது, அன்சர் தீன் ஆகிய கடலோடிகளையும் நகர நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.





காலை 10.00 மணிக்கு இராணுவம் மீட்பு பணிக்காக வந்தபோது அவர்களுக்கும் தமுமுக தொண்டர்கள் உதவி செய்தனர்.
16.11.15இரவிலிருந்து அடுத்தநாள் 17.11.15 நன்பகல் 12.15 வரை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை முடித்துவிட்டு பின் முடிச்சூர் பகுதிகளில் மீட்பு பணிக்காக படகை லாரியில் ஏற்றிச் சென்று அங்கு நிறைய மக்களை மீட்டெடுத்தது தாம்பரம் மக்களின் மனதில் தமுமுகவிற்கு தனியிடம் பெற்றுத்தந்தது என்பதை மறுக்க இயலாது. அடித்தட்டு மக்கள் முதல் அப்பார்ட்மெண்ட் மக்கள் வரை அனைவரையும் மீட்டெடுத்ததில் தமுமுக என்றும் அனைத்து மக்களுக்குமான இயக்கம் என்பதை மீண்டுமொருமுறை நீருபித்தது.
வரதராஜபுரம் பகுதியில் குதாவும், நிஜாமும் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி துணிச்சலாக செயலாற்றினர். அங்கு தண்ணீரே சாக்கடையுடன் கலந்திருந்தது சில இடங்களில் ஆழம் அதிகமாக இருந்தது. இருப்பினும் இருவரும் துணிச்சலுடன் களமிறங்கி மீட்பு பணி செய்தனர். அதே போல் கோவளம் சகோதரர்கள் நால்வரும் படகை லாவகமாக இயக்கி எல்லாவிதமான சிக்கலான சூழலையும் சமாளித்து படகை செலுத்தினர். இறைவன் அவர்களுக்கு நற்கூலிகளை வழங்குவானாக.
தாம்பரம் நகரம் சார்பாக வெள்ள நிவாரணப் பணிகள்
17.11.2015 மாலை மமக மாநில அமைப்பு செயளாலர் சகோ. யாக்கூப் அவர்கள் தலைமையில் தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் ஒரு பகுதியான கன்னடபாளையம் பள்ளிக்கூடத்தில் ரூபாய் 1 இலட்சத்திற்கும் அதிகமான செலவில் லுங்கிகள், சேலைகள், போர்வைகள்,பழங்களை மமக மாநில தலைவர் பேரா,ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் வழங்கினார்.
அதேபோல் 19.10.2015 அன்று காஞ்சி வடக்கு மாவட்டம் தாம்பரம் பெருநகரம் சார்பாக தமுமுக, மமக சார்பாக, தாம்பரம் பகுதியில் சேவாசதன் மற்றும் பல்வேறு அரசு பள்ளிகளில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு1இலட்சத்து 50,000 ரூபாய் செலவில்1200 போர்வைகள், உடைகள் ஆகியவற்றை வெள்ள நிவாரண உதவியாக மமக மாநில அமைப்பு செயலாளர் சகோ. யாக்கூப் தலைமையில், மமக மாநிலப் பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் வழங்கினார்கள்.
உதவும் உள்ளத்திற்கு உதவிய தமுமுக
தாம்பரத்தில் இயங்கிவரும் தொண்டுநிறுவனமான "உதவும் உள்ளம்" மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால்அவர்கள் தற்காலிகமாக பேபி உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தமுமுக சந்தித்த போதுஅந்த இல்லத்தின் நிர்வாகி கண்ணியமிகு. துறைமுக லட்சுமி அவர்கள் சகோ. யாக்கூப் அவர்களிடம் அடிப்படைத் தேவைகளை கூறினார்.உடனடியாக அவர்களுக்கு டூத் பிரஷ், பக்கெட்டுகள், குவளைகள், போர்வைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடைகள் என ரூபாய் 85,000க்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது
பிரியாணி வழங்கிய மாணவர்கள்!
தாம்பரத்தில் பேபி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக தங்கியிருக்கும் "உதவும் உள்ளம்" தொண்டு நிறுவன குழந்தைகளுக்கு பிரியாணி மற்றும் சைவ உணவுகளை தாம்பரம் நகர தமுமுக மற்றும் மாணவர் இந்தியா மாணவர்கள் வழங்கினார்கள். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, தமுமுக மாணவரணி நகர செயலாளர் ஆசிக் ஹமீது உட்பட நகர மாணவரணி சகோதரர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
மமக மாநில அமைப்பு செயளாலர் சகோ. யாக்கூப் அவர்கள் தலைமையில் நடந்த நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வுகளில் தமுமுக மாவட்ட செயளாலர் அப்துல் ரவூப், தமுமுக மாவட்ட பொருளாளர் ஜாஹிர் ஹுசைன்,மமக மாவட்ட செயலாளர் சலீம்கான்,தொணடரணி செயலாளர் S.R.A.இப்ராஹிம்,தாம்பரம் நகர செயளாலர் A.ஆசாத் காமில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் N.Kஅக்பர்,முன்னால் நகர தலைவர் S.முஹம்மது இக்பால்,மாவட்ட மாணவர் இந்தியா செயளாலர் தமீம் அன்சாரி நகர துணைச் செயலாளர்கள் அமீனுதீன், ஷாஜஹான், நகர இளைஞரணி செயலாளர் அப்துல்ரஹ்மான், மாணவரணி செயலாளர் ஆசிக் ஹமீது மற்றும் நகர,வார்டு,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
Tuesday, 24 March 2015
Thursday, 19 March 2015
மாவட்ட செயலாளராக சகோதரர் யாக்கூப் நியமனம்!
தமுமுக மாவட்ட செயலாளராக
சகோதரர் யாக்கூப் நியமனம்!
தமுமுகவின் மாநில பொதுக்குழு வேலூரில் கடந்த 07.03.15 அன்று நடந்தது. பொதுக்குழுவிற்கு பின்னர் மாவட்ட செயலாளர்களை மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் அறிவித்தார். இது வரை தேர்தல்கள் மூலமே மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் முதன்முறையாக மாநில தலைமையே இனி மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் என்ற முடிவை தலைமை எடுத்தது. அதன் படி இது வரை தேர்தல் மூலமாக மாவட்ட செயலாளராகவும், மாவட்ட தலைவராகவும் தேர்வு செய்யப்பட்ட சகோ. எம். யாக்கூப் அவர்கள் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளராக தலைமை நியமித்தது.
வாழ்த்தும், வருத்தமும்
சகோ யாக்கூப் அவர்களுக்கு மாநில செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்பது மாவட்ம் முழுவதும் உள்ள இயக்க சகோதரர்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போனதால் இயக்க சகோதரர்கள் வருத்தமடைந்துள்ளனர். வருத்தமுடனே அனைவரும் வாழ்த்துச் சொல்கின்றனர். மாவட்ட தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்களால் மாநில செயலாளராக இவர் நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இம்முறை பலமாக எழுந்துள்ளது.

சகோ. யாக்கூப் கடந்து வந்த பாதை
இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 1995 முதலே இயக்கத்தின் உறுப்பினராகவும், கிளை, நகரம், பின்பு மாவட்ட தொண்டரணி செயலாளர், மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர் என அவரது படிநிலை வளர்ச்சி மீண்டும் மாவட்ட செயலாளராக வந்து உள்ளது. சிறந்த சமூகப் போராளி. சமுதாயப் பிரச்சினைகளுக்காக 4 முறை நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்தார். தடா வழக்கில் 5 ஆண்டுகள், பாளையங்கோட்டையில் மூத்த தலைவர் சகோ. ஹைதர் அலியுடன் சிறைவாசம், அதே போல் நபிகள் நாயகத்தை கேளி செய்த அமெரிக்க ஊடக பயங்கரவாதத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னை அமெரிக்க துணை தூதரகம் மக்களின் தன்னெழுச்சியான தாக்குதல் காரணமாக 19 பேர் கைது செய்யப்பட்டனர் அதில் சகோ. யாக்கூப் அவர்களும் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறைக்கு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
தாம்பரத்தில் இரண்டு மாநில செயற்குழு, மாநில பொதுக்குழு, மாவட்ட மாநாடு, மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாடு தமுமுகவின் வரலாற்றில் தாம்பரத்தை விட்டு விட்டு வரலாற்றை பதிவு செய்ய இயலாத வண்ணம் இவரது பணிகள், இயக்கச் சகோதரர்களை அரவணைத்து செல்லும் போக்கு என மாவட்ட நிர்வாகத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக கட்டமைத்து செயலாற்றியுள்ளதை பிற மாவட்ட இயக்கச் சகோதர்கள் பாராட்டும் அளவிற்கு இவரது பணிகள் இருந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
மென்மேலும் இவரது பணிகள் சிறக்க அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக.
Labels:
kancheepuram,
mmk,
tambaram,
tambaram news,
tmmk,
yakoob,
தமுமுக,
தாம்பரம்
Location:
Tambaram, Chennai, Tamil Nadu, India
Tuesday, 27 January 2015
தாம்பரம் நகர பொதுக்குழு மற்றும் அமைப்பு தேர்தல் 27.01.2015
இன்று 27.01.15 தாம்பரம் டி.ஜி.பி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற தாம்பரம் நகர தமுமுக நகர பொதுக்குழு மற்றும் நகர, வார்டு நிர்வாகத்திற்கான தேர்தல் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம். யாக்கூப் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இப்பொதுக்குழுவில் இது வரையிலான தமுமுக வின் சமூகப் பணிகளை நகர தலைவர் முஹம்மது இக்பால் எடுத்துரைத்தார்
பின்னர் நடந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது அவர்கள் தேர்தலை நடத்தினார் இத்தேர்தலில் தாம்பரத்தில் 9 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற்றது . பின்னர் நகர நிர்வாகத்திற்கு தேர்தல் நடைபெற்றது.
நகர நிர்வாகிகளாக,
ஆ. ஆசாத்காமில் - நகர செயலாளர்,
எஸ்.எஸ். ஷேக் மைதீன் - நகர பொருளாளர்
அ. அப்துல் ரஹ்மான் - துணை செயலாளர்
அமீனுதீன் - துணை செயலாளர்
ஷாஜஹான் - துணை செயலாளர்
அ. ஆஷிக் ஹமீது - மாணவர் அனி செயலாளர்
என்.கே. மன்சூர் அலிகான் - தொண்டரணி செயலாளர்
பிஇ ஷாகுல் ஹமீது ஆகியோர் நகர நிர்வாகிகளாக ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ். இவர்கள் சிறப்பாகவும், நேர்மையாகவும், பணியாற்ற துஆ செய்யுங்கள்.
பின்னர் நடந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது அவர்கள் தேர்தலை நடத்தினார் இத்தேர்தலில் தாம்பரத்தில் 9 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற்றது . பின்னர் நகர நிர்வாகத்திற்கு தேர்தல் நடைபெற்றது.
நகர நிர்வாகிகளாக,
ஆ. ஆசாத்காமில் - நகர செயலாளர்,
எஸ்.எஸ். ஷேக் மைதீன் - நகர பொருளாளர்
அ. அப்துல் ரஹ்மான் - துணை செயலாளர்
அமீனுதீன் - துணை செயலாளர்
ஷாஜஹான் - துணை செயலாளர்
அ. ஆஷிக் ஹமீது - மாணவர் அனி செயலாளர்
என்.கே. மன்சூர் அலிகான் - தொண்டரணி செயலாளர்
பிஇ ஷாகுல் ஹமீது ஆகியோர் நகர நிர்வாகிகளாக ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ். இவர்கள் சிறப்பாகவும், நேர்மையாகவும், பணியாற்ற துஆ செய்யுங்கள்.
Subscribe to:
Posts (Atom)