
தாம்பரத்தில் தமுமுக சார்பாக பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு 27.11.2015 மாலை 6.30 மணிக்கு தாம்பரம் எஸ்.ஜி.எஸ். மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியை சகோதரி. சுபைதா பேகம் அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தார்.
சகோதரி. மெக்ராஜ் பாத்திமா ஆலிமா அவர்கள்,
"இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியை தாம்பரம் நகர தமுமுக மற்றும் அல் இஸ்லாஹ் வழிகாட்டுதல் மைய நிர்வாகிகள் ஆசாத் காமில், கவுஸ்பாஷா, அஹமது ராஜா, முபாரக் அலி, தமீம் அன்ஸாரி, அமீனுதீன், ஆசிக் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரளாக பங்கு கொண்டனர்.
No comments:
Post a Comment