Thursday, 19 March 2015

மாவட்ட செயலாளராக சகோதரர் யாக்கூப் நியமனம்!

தமுமுக மாவட்ட செயலாளராக 
சகோதரர் யாக்கூப் நியமனம்!


தமுமுகவின் மாநில பொதுக்குழு வேலூரில் கடந்த 07.03.15 அன்று நடந்தது. பொதுக்குழுவிற்கு பின்னர் மாவட்ட செயலாளர்களை மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் அறிவித்தார். இது வரை தேர்தல்கள் மூலமே மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் முதன்முறையாக மாநில தலைமையே இனி மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் என்ற முடிவை தலைமை எடுத்தது. அதன் படி இது வரை தேர்தல் மூலமாக மாவட்ட செயலாளராகவும், மாவட்ட தலைவராகவும் தேர்வு செய்யப்பட்ட சகோ. எம். யாக்கூப் அவர்கள் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளராக தலைமை நியமித்தது.
வாழ்த்தும், வருத்தமும்
சகோ யாக்கூப் அவர்களுக்கு மாநில செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்பது மாவட்ம் முழுவதும் உள்ள இயக்க சகோதரர்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பு பொய்த்துப்போனதால் இயக்க சகோதரர்கள் வருத்தமடைந்துள்ளனர். வருத்தமுடனே அனைவரும் வாழ்த்துச் சொல்கின்றனர். மாவட்ட தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்களால் மாநில செயலாளராக இவர் நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இம்முறை பலமாக எழுந்துள்ளது. 

மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட சகோ. யாக்கூப் அவர்களுக்கு தமுமுக தாம்பரம் நகரம் சார்பாக நகர செயலாளர்        ஆ.ஆசாத்காமில் வாழ்த்துக்களை தெரிவித்தார். தமுமுக தாம்பரம் நகரம் சார்பாக யாக்கூப் அவர்களை மாநில செயலாளராக நியமிக்க கோரி நகர பொதுக்குழு தீர்மானத்தை தலைமைக்கு அனுப்பியுள்ளது.

சகோ. யாக்கூப் கடந்து வந்த பாதை
இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட 1995 முதலே இயக்கத்தின் உறுப்பினராகவும், கிளை, நகரம், பின்பு மாவட்ட தொண்டரணி செயலாளர், மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர் என அவரது படிநிலை வளர்ச்சி மீண்டும் மாவட்ட செயலாளராக வந்து உள்ளது. சிறந்த சமூகப் போராளி. சமுதாயப் பிரச்சினைகளுக்காக 4 முறை நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்தார். தடா வழக்கில் 5 ஆண்டுகள், பாளையங்கோட்டையில் மூத்த தலைவர் சகோ. ஹைதர் அலியுடன் சிறைவாசம், அதே போல் நபிகள் நாயகத்தை கேளி செய்த அமெரிக்க ஊடக பயங்கரவாதத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னை அமெரிக்க துணை தூதரகம் மக்களின் தன்னெழுச்சியான தாக்குதல் காரணமாக 19 பேர் கைது செய்யப்பட்டனர் அதில் சகோ. யாக்கூப் அவர்களும் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறைக்கு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 
தாம்பரத்தில் இரண்டு மாநில செயற்குழு, மாநில பொதுக்குழு, மாவட்ட மாநாடு, மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாடு  தமுமுகவின் வரலாற்றில் தாம்பரத்தை விட்டு விட்டு வரலாற்றை பதிவு செய்ய இயலாத வண்ணம் இவரது பணிகள், இயக்கச் சகோதரர்களை அரவணைத்து செல்லும் போக்கு என மாவட்ட நிர்வாகத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக கட்டமைத்து செயலாற்றியுள்ளதை பிற மாவட்ட இயக்கச் சகோதர்கள் பாராட்டும் அளவிற்கு இவரது பணிகள் இருந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
மென்மேலும் இவரது பணிகள் சிறக்க அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக.


No comments:

Post a Comment