Saturday, 28 November 2015

தாம்பரத்தில் தமுமுக மற்றும் மமக செயல்வீரர்கள் கூட்டம்



காஞ்சி வடக்கு மாவட்டம், தாம்பரம் பெருநகரம் தமுமுக மற்றும் தமுமுக சார்பாக 27.11.2015 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாம்பரம் எஸ்ஜிஎஸ் மஹாலில் நகர செயல்வீரர்கள் கூட்டம் தமுமுக நகர செயலாளர் ஆ. ஆசாத்காமில் தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமிய பிரச்சார பேரவை செயலாளர் கௌஸ்பாஷா கிராத் ஓதி துவக்கி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது இக்பால் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சலீம்கான், மாநில அமைப்புச் செயலாளர் சகோ. யாக்கூப் அவர்கள், பேரா. ஹாஜா கனி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். டிசம்பர் 6 அன்று பல்லாவரத்தில் நடைபெற உள்ள பாப்ரி மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து நடைபெறும் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் பற்றி பேச்சாளர்கள் விளக்கி பேசினார்கள். இந்நிகழ்வில் நகர பொருளார் ஷேக் மொய்தீன், மாவட்ட செயலாளர் அப்துர் ரவூப், இப்றாஹிம், அக்பர், தமீம் அன்ஸாரி உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். முடிவில் நகர பொருளாளர் ஷேக் மொஹிதீன் நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment